Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

4 ஆண்டுகள் இடைவேளைக்கு பிறகு மீண்டும் களமிறங்கிய நஸ்ரியா..!

•On June 16, 2018
Untitled-3
Share
நடிகர்கள் பிரிதிவி ராஜ், பார்வதி ஆகியோர் நடித்திருக்கும் "மை ஸ்டோரி"  திரைப்படத்தின், ஆராரோ எனும் பாடல் வீடியோவானது சமீபத்தில் வெளியாகியுள்ளது. இப்படத்தில் நேரம் படம் மூலம் அனைவரின் மனதையும் கவர்ந்த நஸ்ரியா ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். திருமணம் செய்துகொள்வதற்கு முன் நடித்து என்னமோ இரண்டு வருடங்கள் தான் என்றாலும், திரைத்துறையில் 10 வருடங்களுக்கு மேல் நடித்த நாயகிகளின் இடத்தை எளிதாக பிடித்து விட்டார் நஸ்ரியா. நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்து கொண்ட பின்னர், சுமார் 4 வருடங்கள் சினிமாவை விட்டு விலகி இருந்த இவர் தற்பொழுது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். கடந்த 2014ம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான 'பேங்கலூர் டேஸ்' திரைப்படத்தை இயக்கிய அஞ்சலி மேனனுடன் மீண்டும் இணைந்து கூடே எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார் நஸ்ரியா. முழுக்க முழுக்க நஸ்ரியா இடம் பெற்றிருக்கும் இந்த பாடலானது, பச்சை பசேலென்ற சூழலுடன், அவரது அழகிய குழந்தை தனமான முகபாவனைகள் இணைந்து மிக அழகான ஒரு பாடலாக உருவாகி இருக்கிறது. இதனால் நஸ்ரியாவின் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமையும் என எதிர்பார்க்க படுகிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.