Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

"24", சூர்யாவின் ராயல் கிளாஸ் வில்லத்தனம் - திரைப்பட விமர்சனம்:

•On May 6, 2016
750x375_pop ad
Share
750x375_pop ad நடிகர்கள்: மூன்று வித்தியாச கதாபாத்திரங்களில் சூர்யா, நித்யா மேனன், சமந்தா, R.அஜய்குமார், கிரீஷ் கர்னாட், சரண்யா பொன்வண்ணன், சத்யன், சுதா, அப்புக்குட்டி, மோகன்ராம், மற்றும் பலர். தொழில்நுட்ப கலைஞர்கள்: எழுது மற்றும் இயக்கம்: விக்ரம்.கே.குமார், ஒளிப்பதிவு: திரு, இசை: A.R.ரஹ்மான், படத்தொகுப்பு: பிரவீன்குமார் புடி, கலை: அமித்ரே மற்றும் சுப்ரத்த சக்ரபோர்த்தி, பாடல்கள்: வைரமுத்து மற்றும் மதன் கார்கி, தயாரிப்பு: 2D என்டர்டைன்மென்ட் சார்பாக நடிகர் சூர்யா. உலகெங்கும் படத்தை வெளியிடுபவர்: ஸ்டுடியோ கிரீன் கே.ஈ.ஞானவேல்ராஜா. "24", வித்தியாசமான டைட்டிலில் மிக மிக வித்தியாசமான ஒரு உயர் ரக சினிமா! ஆனால் காட்சிக்கு காட்சி செம சுவாரஸ்யம். "சேதுராமன்" என்ற விஞ்ஞானி அரிய "டைம் மிஷின்" ஒன்றை கண்டுபிடிக்க எடுக்கும் முயற்சிகள், பல தடவை தோற்றுப்போக, மனம் தளராமல் ஆராய்ச்சியை தொடர வெற்றி பெற்றார் என்ற காட்சியுடன் படம் துவங்கிட, கூடவே பல நிமிடங்கள் இடைவெளி விட்டு பிறந்த சகோதரன் "ஆத்ரேயா" அரிய கண்டுபிடிப்பான கடிகாரத்தை களவாட வருவது, (புது ஸ்டைல் கொஞ்சம் நடிகர்திலகம் சிவாஜி சாயல், சூரியாவின் ராயல் கிளாஸ் வில்லத்தனம்) என்று இன்னொரு சூர்யா அங்கே பற்றிக்கொள்கிறது ஆவல். நித்யா மேன்ன் அன்பான மனைவி, கொஞ்ச நேரமே வந்தாலும் எண் கொட்டவைக்கிறார். "கழுகு" ஒன்று செய்யும் விஷயத்தில் வில்லன் காயம்பட, தப்பிக்கும் சேது, ஓடற ரயிலில் மகனை காப்பாற்றுவிட்டு கொல்லப்பட, கோபத்தில் வில்லன் ஆத்ரேயா விபத்தில் கோமா'க்கு போக வழக்கமான(ரொம்ப நாளாச்சு) 26 ஆண்டுகளுக்கு பிறகு என்ற டைட்டிலுடன் படம் துவங்க, மகன் சூர்யா கரெக்டாக கடிகாரம் ரிப்பேர் செய்யுற கடை, அந்த கேரக்டர் பெயர் மணி, இப்படி பல விஷயங்களை டைரக்டர் சரியாக சேர்த்துள்ளார். சுவிட்ச் ஷாக் அடிப்பது, பொக்கிஷமான வாட்ச் பெட்டியை, சேரின் பேலன்ஸ் சரியசெய்ய பயன்படுத்துவது கல கல காட்சிகள். சமந்தா அறிமுக காட்சியில் அவங்க குடும்பத்தினர் மௌனவிரதம் இருக்கின்ற விவரம் சூப்பர். அந்த காரணத்தை கிளைமாக்ஸ் முன்பு, சரண்யா கேரக்டருடன் சேர்ப்பது அருமை. சமந்தாவை பார்த்ததும் லவ், அந்த காதலை ஈடேற வைக்க மணி செய்யும் காட்சிகள் சிரி சிரி ரகம். கடிகாரத்தின் பவரை அறியாத மணி(சூர்யா) டைம் மிஷின் குறித்து அறிந்தபிறகு ஆச்சர்யப்பட்டு சோதனை போடும் காட்சிகள் யதார்த்தமாக இருப்பது அருமை. அடுத்த காட்சி என்ன வரும் என்பதை யூகித்து பார்தால் ஏமாற்றமே, டைரக்டர் விக்ரம குமார் திரைக்கதை வசனங்களில் விளையாடியுள்ளார். கடிகாரத்துக்காக மீண்டு(ம்) வரும் ஆத்ரேயா அசத்திவிட்டார். சமந்தா சூர்யா காதல் போஷன் செம கல கல, சத்யன், சுதாம்மா, கிரிஷ்கர்னாட் இவர்கள் நடிப்பு அருமை. "ஆற்றல்" பாடல் பிரமாதம். இசையில் ஏ.ஆர்.ரகுமான் வியக்கவைக்கிறார். ஒளிப்பதிவு அருமை, ஒளிப்பதிவாளர் திரு'வுக்கு சிறப்பு வாழ்த்துக்கள். புதுவடிவான கதை, காட்சி ரசிக்க வைக்கிற இயக்கம் என விகரம் குமார் அசத்திவிட்டார். அரங்க அமைப்பு, அபாரம். கலை மற்றும் அனிமேஷனுக்கு கூடுதல் பாராட்டுக்கள். அதிக பொருட்செலவில் உயர்ந்த தரமான படத்தை தயாரித்த சூர்யா அவர்களுக்கு பாராட்டுக்கள். விடுமுறையில் சினிமா பார்க்கும் எண்ணம் உள்ளவர்கள் வாங்க, நீங்க டிக்கெட்டுக்கு கொடுக்கும் பணத்திற்கு திருப்த்தி உத்திரவாதம். குடும்பத்துடன் "24" படத்துக்கு தயக்கமின்றி சென்று வருக. ஆச்சர்யப்பட்டு ரசித்து உங்களை மறப்பீர்கள். ஹவுஸ்புல் காட்சிகளாக வெற்றி பெறப்போவது உறுதி. வில்லனாக வரும் ஆத்ரேயா ஸ்கோர்களை அள்ளப்போவது உறுதி. "அரசியே" பாடலில் சூர்யா அழகோ அழகு. ஆக இந்த சம்மர் லீவில் சந்தேகமில்லாம "24" படம் பார்க்க போங்க, ஆச்சர்யபட போறீங்க, ஆனந்தமடையப் போறீங்க. "24" படம் 24 காரட் தங்கம்..சந்தேகமே இல்ல. இயக்குனர் விக்ரம்.கே.குமார் திறமைக்கு பாராட்டுக்கள்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.