"சிறுத்தை" படத்திற்கு பிறகு மீண்டும் காக்கி அணியும் கார்த்தி...

நடிகர் கார்த்தி போலீசா நடித்து வெளிவந்த படம்தான் சிறுத்தை இப்படத்தில் கார்த்தியின் போலீஸ் கேரக்டர் மிக கட்சிதமாக பொருந்தியது. அதற்கு பின் அவர் போலீஸ் அதிகாரியாக நடிக்கவில்லை என்று ஒரு சிறு கவலை இருந்தது அதை நிறைவேற்றும் விதமாய் இப்பொழுது போலீஸ் அதிகாரியாய் நடிக்க உள்ளார்.
இப்படத்தை எச்.வினோத் அவர்கள் இயக்குகிறார். இவர் இதற்கு முன்பு சதுரங்க வேட்டை படத்தை இயக்கியுள்ளார். இப்படதிற்கு "தீரன் அதிகாரம் ஒன்று" பெயர் வைத்துள்ளனர்.
இந்தப் படத்தில் கார்த்தி, ரகுல் ப்ரீத்தி சிங், அபிமன்யூ சிங், போஸ் வெங்கட் உள்பட பலர் நடிக்கிறார்கள். படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார்.
கார்த்தியின் கேரக்டர் பெயர் தீரன். வட இந்தியாவில் கொளுத்தும் வெயிலில் தொடர்ந்து 42 நாட்கள் படப்பிடிப்பை நடத்திவிட்டு திரும்பியிருக்கிறார்கள் படக்குழுவினர். ‘காற்று வெளியிடை’ படத்துக்காக குளிரில் நடுங்கிய கார்த்தி, தற்போது ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்துக்காக வெயிலில் காய்ந்து வருகிறார்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
