Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

200 தியேட்டர்களில் வெளியாகும் "என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா"..!

•On May 3, 2018
ET00074974
Share

தொடர்ந்து வெற்றிப்படங்களில் நடித்து, தெலுங்கின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக விளங்கும் அல்லு அர்ஜூன் நடிப்பில் நாளை வெளிவரும் படம் - 'நாபேரு சூர்யா நாஇல்லு இந்தியா'.

'என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா' என்ற பெயரில் தமிழ் பேசும் இந்தப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளில் ஒரேநாளில் அதாவது மே 4 ஆம் தேதி வெளியாகிறது.

அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடித்துள்ள இந்தப்படத்தில், அல்லு அர்ஜூனின் அப்பாவாக மனோதத்துவ மருத்துவராக அர்ஜூன் நடித்திருக்கிறார். நெகட்டிவ் கேரக்டரில் சரத்குமார் நடிக்கும் இந்தப் படத்தை வம்சி இயக்கியுள்ளார்.

விஷால் சங்கர் இசையில் ராஜீவ் ரவி ஒளிப்பதிவில், வெங்கடேஸ்வரராவ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. 'என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா' படத்தை தமிழகத்தில் சக்தி பிலிம் பேக்டரி வெளியிடுகிறது.

சமீபகாலமாக மகேஷ்பாபு, பிரபாஸ், ஜூனியர் என்.டி.ஆர் போன்ற தெலுங்கு நடிகர்களின் படங்கள் நேரடியாக தமிழகத்தில் அதிகமான திரையரங்குகளில் வெளியாகி நல்ல வசூலை குவித்துள்ளன. அந்த வரிசையில் அல்லு அர்ஜூன் நடித்த இந்த படமும் நல்ல வசூலை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் தமிழ்நாட்டில் 200 தியேட்டர்களில் 'என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா' படம் வெளியாகிறது.

இதில் 150 தியேட்டர்களில் தமிழ்ப்பதிப்பும், 50 தியேட்டர்களில் தெலுங்குப்பதிப்பும் திரையிடப்படுகிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.