Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

2 அடிக்கு தேங்கி நிற்கும் மழை நீர்- போக்குவரத்து பாதிப்பு!

•On November 4, 2017
rain566-
Share
rain566- காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருவதால் அந்தப் பகுதியில் உள்ள சுமார் 98க்கும் மேற்பட்ட ஏரிகள் முழு கொள்ளவை எட்டியுள்ளன. இதனால் மீண்டும் மழை பெய்தால் ஏரியில் இருந்து நீரை வெளியேற்ற வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. velachery_mainnn இந்நிலையில் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு அருகே அமைந்துள்ள சிங்கப்பெருமாள் கோவிலில் 2 அடி அளவிற்கு மழைநீர் ஓடுவதால் போக்குவரத்து பாதிப்பு. தெல்லிமேடு ஏரிக்கரை உடைந்ததால் 2 நாட்களாக சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது தென்மேலப்பாக்கம், சிங்கப்பெருமாள் கோயில் ஏரிகளும் நிரம்பி வழிவதால் சாலையை கடந்து ஓடும் நீர்மட்டம் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. எனவே இந்த சாலையை பயன்படுத்துவோர் எச்சரிக்கையோடு இருக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.