ஹிந்தி கற்கும் பாகுபலி...

'பாகுபலி' புகழைத் தொடர்ந்து இந்திய திரையுலகில் பிரபலமடைந்த பிரபாஸ் நடிப்பில் உருவாகும் 'சாஹோ' திரைப்படம் முன்னதாக தெலுங்கில் எடுக்கப்பட்டு தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகும் என்று கூறப்பட்டது. ஆனால், தற்போது இப்படத்தை தெலுங்கு மற்றும் ஹிந்தியில் படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
'பாகுபலி 1&,2' தெலுங்கில் படமாக்கப்பட்டு தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியானது. அந்தப் படத்தின் வரவேற்பு விண்ணை முட்டியதையடுத்து 'சாஹோ' திரைப்படம் ஹிந்தியில் படமாக்கப்பட உள்ளது. சுஜித் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் மூலம் பிரபாஸ் பாலிவுட் அறிமுகமாகவிருக்கிறார்.
இதற்காக நடிகர் பிரபாஸ் பயிற்சியாளரை நியமித்து பிரத்தேயகமாக ஹிந்தி பயின்று வருகிறார். மிகப்பெரிய பொருட் செலவில் ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகவிருக்கும் 'சாஹோ' திரைப்படத்தின் நீண்ட முதல் கட்டப்படப்பிடிப்பு அமெரிக்காவில் நடைபெறவுள்ளதால், 'பாகுபலி' பிரபாஸ் தன்னை தயார்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
Previous Postஜூன் 9 முதல் உலகமெங்கும் "சத்ரியன்"...
