ஹாலிவுட்டில் தடம் பதிக்கும் நிலா..!

தமிழ் திரையுலகின் அன்பே ஆருயிரே புகழ் நிலா, ஹாலிவுட் தொடர்களில் நடித்து வருகிறார்.
இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யாவுடன் அன்பே ஆருயிரே படத்தில் அறிமுகமானவர் நிலா தொடர்ந்து (ஜாம்பவான்ல, லீ,மருதமலை, காளை) உள்ளிட்ட சில தமிழ்ப் படங்களில் நடித்தார். தெலிங்கிலும் நடித்துவந்தார். தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்காததால் இப்போது மீரா சோப்ரா என்ற தனது உண்மையான பெயரில் பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.
ஹாலிவுட்டில் கவனம் செயலுத்தி வரும் பிரியங்கா சோப்ராவைப் போன்று, மீராசோப்ராவும் ஹாலிவுட் தொடர்களில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். இதன் பலனாக கனடா நாட்டு சின்னத்திரை தொடரிலும் நிலா நடித்து வருகிறார்.
இதுகுறித்து கூறிய மீராசோப்ரா (அலைஸ்) நிலா "கனடா நாட்டு சேனல் ஒன்றில் ஒளிபரப்பாகும் தொடரில் நடிக்கிறேன். இதில் ஜோசியம் பார்க்கும் பெண்ணாக நடித்து வருகிறேன். மேலும் சில ஹாலிவுட் பட வாய்ப்புகள் வருகிறது. அதில் நடிப்பது பற்றி முடிவு செய்யவில்லை" என்றார்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
