Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ஷாம் நடிக்கும் கா-வியன்...

•On May 28, 2017
sham
Share
sham படம்- "கா-வியன்" ஒளிப்பதிவு - N.S.ராஜேஷ் குமார் இசை - ஷ்யாம் மோகன் பாடல்கள் - மோகன்ராஜ் கலை - T.N கபிலன் நடனம் - விஷ்ணுதேவா எடிட்டிங் - அருண்தாமஸ் மக்கள் தொடர்பு - மணவை புவன் தயாரிப்பு - 2M cinemas ” K.V. சபரீஷ் எழுத்து இயக்கம் - சாரத நேற்று பார்த்தது போலிருக்கிறது ’12பி’ படத்தில் மீசை அரும்புகிற வயதுப் பையனாக இளமைத் துள்ளலுடன் 2002ல் அறிமுகமான ஷாம், இன்று தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். இவர் திரையுலகில் 13 ஆண்டுகள் பயணித்திருக்கிறார். இவர் இறுதியாக கன்னடத்தில் கடந்த ஆண்டு (2016) "கேம்" எனும் படத்தில் நடித்திருந்தார். அதே படம் தமிழில் "ஒரு மெல்லிய கொடு" என்று பெயர் மற்றம் செய்யப்பட்டு வெளியானது. இப்படத்திற்கு பிறகு மீண்டும் நடிகர் ஷாம் தற்போது "2M cinemas" K.V. சபரீஷ் தயாரிப்பில், சாரதி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் ஒரு பிரம்மாண்ட படத்தில் நடித்து வருகிறார். ரோட் திரில்லர் ஜானரில் உருவாகும் இப்படத்துக்கு தமிழில் "கா-வியன்" என்றும் தெலுங்கில் "வாடு ஒஸ்தாடு" என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அண்மையில் இப்படத்துக்காக சண்டை பயிற்சியாளர் STUN சிவா தலைமையில் ஒரு அதி பயங்கர கார் சேஸிங் சண்டைக்காட்சி, லாஸ் வேகாஸில் மக்கள் அதிகம் கூடும் வீதிகளில் பரபரப்பாக படமாகியுள்ளது. இப்படத்தின்ல் சண்டைக்காட்சி அனைவரையும் பிரம்மிப்பில் ஆழ்த்தும். மேலும் இப்படத்தில் கோலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகர்கள் மற்றும் தொழிலநுட்ப கலைஞர்கள் பணியாற்றி வருகின்றனர். இதனால் இப்படம் ஹாலிவுட் தரத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷாம் ஜோடியாக "மனம் கொத்திப் பறவை" படப்புகழ் ஆத்மியா நடிக்கும் இப்படத்தில் ஸ்ரீதேவி குமார், ஸ்ரீ நாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். கோலிவுட் நடிகர் ஜெஸ்டின் விகாஸ் இந்த படத்தின் வில்லனாக நடிக்கிறார். இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கான இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது. இந்த படம் ஷாமிற்கு ஒரு மைல் கல்லாக அமையும் என்றார் தயாரிப்பாளர் கே.வி.சபரீஷ்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.