Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

வொயிட் பாக்ஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் வெளியாகும் ஜாக்கி சானின் "தி பாரினர்" !

•On November 1, 2017
the
Share
the உலகம் முழுக்க எத்தனையோ சண்டை காட்சி படங்கள் வெளியாகிறது. அதிலும் கதாநாயகன் ஜாக்கி சான் நடிச்ச படமாக இருந்தால் இன்னும் நம் தமிழ் ரசிகர்கள் ரசித்து ரசித்து பார்ப்பவர்கள் அதிகம். ஏனென்றால் மொழி, இனம் கடந்து சினிமா ரசிகர்களால் ஆராதிக்கப்படும் ஆதர்ஷ நாயகன் ஜாக்கி சான். இவர் நடித்த படம் எந்த நாட்டில் வெளியாகிறதோ அந்த மக்களின் மொழியை டப்பிங்கில் கொண்டு வருவார்கள் நம் தயாரிப்பாளர்கள். அதிலும் தமிழகத்தில் ஜாக்கி சான் சென்னை பற்றி படத்தில் டயலாக் பேசுகிற காட்சிகளுக்கு திரையரங்குகளில் கை தட்டல்கல் குவியும். கடந்த மாதம் (அக்டோபர்) 13 அன்று இந்தியாவை தவிர்த்து உலகம் முழுவதும் ஜாக்கி சான் நடித்து வெளியாகிய "தி பாரினர்" (Foreigner) ஆங்கிலப்படம். இந்த படம் வசூலில் பட்டையை கிளப்பிது. தற்போது இப்படம் வரும் வெள்ளிக்கிழமையன்று (நவம்பர்) 3ல் தமிழகத்தில் 150 திரைகளில் வெளியாகிறது. மேலும் ஆக்க்ஷன், சென்டிமென்ட் கலந்து தயாராகியிருக்கும் "தி பாரினர்" படத்தில் ஜாக்கி சான் உடன் மோதும் வில்லனாக பேஸ்பர்ஜான் நடித்திருக்கிறார். குழந்தை முதல் பெரியவர் வரை விரும்பும் ஹாலிவுட் படங்களில் நடிகர் ஜாக்கி சான் படங்களுக்கு எப்பவுமே எதிர்பார்ப்பு அதிகம் தான். இவர்கள் எதிர்ப்பார்ப்புக்கு விருந்தளிக்கும் விதமாக "தி பாரினர்" படம் இருக்கும் என்கிறார் வொயிட் பாக்ஸ் ஸ்டுடியோ ரங்கநாதன் ஜேம்ஸ் பாண்ட் படமான "கேசினோராயல்" படத்தை இயக்கிய மார்ட்டின் கேம்பக் இயக்கத்தில் தயாராகி உள்ள "தி பாரினர்" தமிழக ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் ஹாலிவுட் படமாக இருக்கும் என்கிறார் ரங்கநாதன். வொயிட் பாக்ஸ் ஸ்டுடியோ சார்பில் ரங்கநாதன் தமிழுக்கு மொழிமாற்றம் செய்துள்ள "தி பாரினர்" திரைப்டத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையை மதுரைமீனாட்சி கிரியேஷன்ஸ் சார்பில் A. ஞானோதயம் வாங்கி வெளியிடுகிறார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.