Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

வைரலாகும் "தனுஷின்" ஹாலிவுட் புகைப்படம்...

•On May 16, 2017
dhanush
Share
dhanush தனுஷ்க்கு எங்கயோ மச்சம் இருக்கு என்றுதான் கூற வேண்டும் ஏனேன்றால் இவர் வேலை செய்யாத இடமில்லை திடீர் என்று பாட்டு பாடுவார் ,தயாரிப்பார், இயக்குனர் ஆவர் இப்படி சொல்லிகொண்டே போகலாம். இப்பொழுது என்ன வென்றால் ஹாலிவுட் படம் நடிக்க இருக்கார். அதாவது பிரபல பிரஞ்சு நாவலான 'தி எக்ஸ்ட்ரார்டினரி ஜர்னி ஆஃப் தி ஃபாகிர் ஹூ காட் டிராப்ட் இன் அன் ஐகியா கபோர்ட்' நாவலை தழுவி உருவாகவுள்ள படத்தின் படப்பிடிப்பு மும்பையில் துவங்கப்பட்டுள்ளது. இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தின் மூலம் நடிகர் தனுஷ் ஹாலிவுட்டில் அறிமுகமாகவிருக்கிறார். இந்நிலையில், சமூக வலைதளத்தில் வெளியான தனுஷின் புகைப்படம் வைரலாகி வருகிறது. முற்றிலும் வித்யாசமான தோற்றத்துடன் தனுஷ் நடிக்கவிருக்கும் இப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். இதில் தனுஷுடன் இணைந்து 'தி ஆர்டிஸ்ட்' திரைப்பட நாயகி பெர்னிஸ் பெஜோ, உமா துர்மான் மற்றும் அலெக்ஸஸாட்ரா தாத்ரியோ உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு இந்தியா, கனடா, உள்ளிட்ட நாடுகளில் படமாக்கப்பட உள்ளது. முன்னதாக இப்படத்தை பிரபல பிரெஞ்சு இயக்குனர் மார்ஜ்னே சத்ரபி இயக்குவதாக கூறப்பட்ட நிலையில், தற்போது கனடா இயக்குனர் கேன் ஸ்காட் இயக்கவிருக்கிறார். சமீபத்தில் 'விஐபி-2' திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்த தனுஷ் தற்போது ஹாலிவுட் படத்தின் கலந்துக் கொண்டுள்ளார். இதனிடையே, கவுதம் மேனனின் 'எனை நோக்கி பாயும் தோட்டா', வெற்றி மாறனின் 'வடசென்னை' உள்ளிட்ட படங்களின் படப்பிடிப்பில் கலந்துக் கொள்வார் என கூறப்படுகிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.