‘வேலையில்லா பட்டதாரி 2' ரிலீஸ் தேதி தள்ளிப்போனது!

நடிகர் தனுஷ் - அமலா பால் ஆகியோரை வைத்து சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய படம் ‘வேலையில்லா பட்டதாரி 2’. இந்தப் படம் 2014ஆம் ஆண்டு வெளியான ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ளது. பாலிவுட் நடிகை கஜோல், இந்தப் படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார். படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
தனுஷின் பிறந்தநாளான 28ம் தேதி வெளியாகும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது சில தவிர்க்க முடியாத காரணத்தினால் இப்படம் ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரத்தில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
