Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

'வேலைக்காரன்' படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிபோக இதுதான் காரணமா?

•On September 8, 2017
velai
Share
velai சிவகார்த்திகேயனின் '24 ஏ.எம்.ஸ்டுடியோஸ்' நிறுவனம் தயாரிப்பில் மோகன்ராஜா இயக்கத்தில் தயாராகி வரும் வேலைக்காரன் படத்தின் ரிலீஸ் தேதியில் தொடர்ந்து குழப்பம் நிலவிவருகிறது. சிவகார்த்திகேயன், நயன்தாரா, பஹத் பாசில் முதலானோர் நடிக்கும் 'வேலைக்காரன்' படத்தை முதலில் விநாயக சதுர்த்திக்கு ரிலீஸ் செய்வதாக அறிவித்தனர். அந்த தேதியில் விவேகம் களத்தில் இறங்கியதால், வேலைக்காரனின் ரிலீஸை ஆயுதபூஜை விடுமுறையையொட்டி இம்மாதம் 29-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர். பிறகு தீபாவளிக்கு 'வேலைக்காரன்' வெளியாகவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. தீபாவளிக்கு மெர்சல் வெளியாகவிருபபதால் வேலைக்காரன் படத்துக்கு 100 தியேட்டர்கள் கூட கிடைக்காது என்பதால் விநியோகஸ்தர்கள் எடுத்துச்சொன்னதும், தற்போது வேலைக்காரன் படத்தின் ரிலீஸை டிசம்பர் 22-ஆம் தேதிக்கு தள்ளி வைத்திருக்கிறார்கள். இதனை அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.