Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

வேலைக்காரன் டீம் நயன்தாராவுக்கு கொடுத்த பிறந்தநாள் பார்ட்டி!

•On November 18, 2017
Nayanthara
Share
Nayanthara தமிழ் சினிமாவை பொறுத்தவரை, தான் நடிக்கும் எந்தப்படத்தின் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாத நயன்தாரா, சமீபகாலமாக தனது நடவடிக்கைகளால் ஆச்சர்யப்படுத்தி வருகிறார். velaikkarans சில நாட்களுக்கு முன் 'அறம்' படத்தை பார்க்க சென்னையில் உள்ள தியேட்டர்களுக்கு விசிட் அடித்த நயன்தாரா, தற்போது வேலைக்காரன் படக்குழுவையும் சந்தோஷத்தில் திக்குமுக்காட வைத்துள்ளார். tem மோகன் ராஜா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்துள்ள படம் 'வேலைக்காரன்'. இந்தப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்ததை அடுத்து, நேற்று பிரிவு உபச்சார விழா கொண்டாடினார்கள் வேலைக்காரன் படக்குழுவினர். இதில் ஆச்சர்யத்திலும் ஆச்சர்யமாக நயன்தாராவும் கலந்துகொண்டார். இன்று அவரது பிறந்தநாள் என்பதால் இந்த நிகழ்ச்சியில் அவருக்காக ஸ்பெஷலாக வரவழைக்கப்பட்டிருந்த பிறந்தநாள் கேக்கையும் வெட்டினார் நயன்தாரா.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.