மகேஷ்பாபு நடிக்கும் 'ஸ்பைடர்' படத்தின் ஆடியோ நாளை வெளியீடு!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், மகேஷ்பாபு நாயகனாக நடித்துள்ள ஸ்பைடர் படம் ரிலீசுக்கு தயாராகி விட்டது. இந்த படத்தில் தேசிய உளவுத்துறை அதிகாரியாக மகேஷ்பாபு நடிக்க, இந்தியாவிலுள்ள பல்வேறு நகரங்களில் வெடிகுண்டு தயாரிக்கும் பயங்கரவாதியாக எஸ்.ஜே.சூர்யா நடித்திருக்கிறார்.
மேலும், செப்டம்பர் 27-ந் தேதி திரைக்கு வரவிருக்கும் இந்த ஸ்பைடர் படத்தின் தமிழ் ஆடியோ விழா நாளை (9-ம் தேதி) சென்னையில் கலைவாணர் அரங்கிலும், தெலுங்கு ஆடியோ விழா வருகிற 15-ம் தேதி ஐதராபாத்தில் உள்ள ஷில்பா கலா வேதிகாவிலும் நடைபெறயிருப்பதாக அறிவித்துள்ளனர்.
இந்த படம் குறித்து மகேஷ்பாபு விடுத்துள்ள செய்தியில், பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராகியுள்ள இந்த படம் எனது கேரியரில் மிகப்பெரிய வெற்றி படமாக அமையும் என்பதோடு, தமிழிலும் எனக்கு நல்லதொரு என்ட்ரியாக அமையும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் மகேஷ்பாபு.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
