Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

வீராணம் ஏரி நீர்: தண்ணீர் பற்றாக்குறையால் தவிக்க போகும் சென்னை!

•On March 16, 2018
Featured image placeholder
Share
veeranam சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் ஏரிகளில் ஒன்று வீராணம் ஏரி. இந்த ஏரி கடலூர் மாவட்டத்தில் உள்ளது. கடலூர் மாவட்டத்தின் குடிநீர் தேவையை மட்டுமின்றி சென்னையின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்து வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த கனமழையின் காரணமாக வீராணம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியது. இதனால் சென்னைக்கு தினமும் இந்த ஏரியில் இருந்து குடிநீருக்காக சப்ளை செய்யப்பட்டது. ஆனால் இந்த ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்த தற்போது சிறிய குளம்போல் காணப்படுவதால் வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு திறந்துவிடப்படும் தண்ணீர் இன்றுடன் நிறுத்தப்படுகிறது. ஏரியின் நீர்மட்டம் வெறும் 39 அடி மட்டுமே இருப்பதால் சென்னைக்கு செல்லும் தண்ணீர் நிறுத்தப்படுவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் சென்னை நகரில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இருப்பினும் சென்னைக்கு குடிநீர் வழங்கி வரும் இன்னொரு ஏரியான சோழவரம் ஏரியில் இந்த வருட கோடைகாலத்தை சமாளிக்கும் அளவிற்கு தண்ணீர் உள்ளதால் சென்னையின் குடிநீர் தேவை ஓரளவு சமாளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.