Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

விஷ்ணுவர்தன் படத்தில் நட்புக்காக எஸ்.ஜே.சூர்யா..!

•On October 25, 2014
Isai Tamil Movie Stills
Share

விஷ்ணுவர்தன் சினிமாவில் நுழைந்து பத்து வருடமானாலும் தனது தம்பியான ‘கழுகு’ கிருஷ்ணாவை வைத்து ஒரு படத்தை இயக்காதது மனக்குறையாகவே இருந்து வந்தது.. இப்போது அந்த குறையை தீர்க்கும் விதமாக ஆர்யா, கிருஷ்ணா இருவரையும் வைத்து ‘யட்சன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்தப்படத்தை யுடிவி நிறுவனம், விஷ்ணுவர்தன் ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது. விஷ்ணுவர்தனின் மியூசிக் பார்ட்னரான யுவன் சங்கர் ராஜா இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். கிஷோர் தம்பி ராமையா, ஜான் விஜய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

அதுமட்டுமல்ல இந்தப்படத்தில் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா கெஸ்ட் ரோலில் நடிக்கிறார். அதிலும் அவர் எஸ்.ஜே.சூர்யாவாகவே நடிக்கிறார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் மூன்று நாட்கள் படமாக்கப்பட்டுள்ளன. அவர் இயக்கிவரும் இசை’ படத்தில் இயக்குனர் விஷ்ணுவர்தன் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததால் அதற்கு நன்றிக்கடனாக ‘யட்சன்’ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாராம் எஸ்.ஜே.சூர்யா.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.