Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

விஷால் மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்த பெண் மீது வழக்கு பதிவு..!

•On November 30, 2018
vishal45556-23-1508772178
Share

நடிகர் விஷால் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய பெண் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

விஷால் மீது பாலியல் குற்றச்சாட்டு :

சென்னை கோபாலபுரத்தைச் சேர்ந்த விஸ்வதர்ஷினி என்ற பெண், தனது வீட்டில் இருந்து நடிகர் விஷால் அதிகாலை 4 மணிக்கு சுவர் ஏறி குதித்து தப்பி ஓடியதாக ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். அந்த பெண் மீது தற்போது பாக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

டான்ஸர் காயத்ரி குறித்து பல்வேறு தகவல்களை சமூக வலைதளங்களில் விஸ்வதர்ஷினி பதிவிட்டு வருகிறார்.அதில், காயத்ரி தம்மை லெஸ்பியன் உறவுக்கு அழைத்ததாகவும் விஸ்வதர்ஷினி குற்றம்சாட்டியிருந்தார்.

அதனை தொடர்ந்து கடந்த 11-ம் தேதி தமது ஃபேஸ்புக் பக்கத்தில், நடிகர் விஷால் அதிகாலை 4 மணிக்கு காயத்ரி வசித்த கோபாலபுரம் அபார்ட்மெண்ட்டின் மதில் சுவர் ஏறி குதித்து வெளியேறியதாகவும் இது தொடர்பான சிசிடிவி பதிவை அந்த அபார்ட்மெண்ட்டின் உரிமையாளர் ராவ் என்பவர் தம்மிடம் கொடுத்ததாகவும் விஸ்வதர்ஷினி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் அந்த வீட்டில் வசிக்கும் 16 வயது சிறுமி பாலியல் ரீதியாக தன்னை பற்றியும் அவதூறு பேசியதாக தேசிய குழந்தைகள் ஆணையத்துக்கு விஸ்வதர்ஷினி புகார் அளித்துள்ளார்.

இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை மாநகர காவல் ஆணையருக்கு தேசிய குழந்தைகள் ஆணையம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமியிடம் வாக்கு மூலம் பெற்று விசாரணை நடத்தியது. அதில் குழந்தை அளித்த புகார் உண்மையானதால் ராயப்பேட்டை போலிசார் போக்சோ சட்டத்தின் கீழ் விஸ்வதர்ஷினி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.