Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

விஷாலுக்கு ஜோடியாகும் ராஷி கண்ணா.!

•On March 23, 2018
visal
Share
 ,

ஏராளமான தெலுங்குப் படங்களில் நடித்துள்ள ராஷி கண்ணா, விஷால் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கிறார்.

புதுடெல்லியைச் சேர்ந்த ராஷி கண்ணா, ‘மெட்ராஸ் கஃபே’ இந்திப் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன்பின் பல தெலுங்குப் படங்களில் நடித்துள்ளார். தமிழில் அதர்வா ஜோடியாக ‘இமைக்கா நொடிகள்’, சித்தார்த் ஜோடியாக ‘சைத்தான் கி பச்சா’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், விஷால் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார் ராஷி கண்ணா. ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளரான வெங்கட் மோகன் இந்தப் படத்தை இயக்குகிறார். ‘ராஜா ராணி’, ‘தெறி’, ‘கத்தி’ உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ஜார்ஜ் சி வில்லியம்ஸ் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய, ‘விக்ரம் வேதா’ படத்துக்கு இசையமைத்த சாம் சி.எஸ். இசையமைக்கிறார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.