Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

விஷாலுக்கு ‘ஆக்சன் ஸ்டார்’ பட்டம் கொடுத்த மன்சூர் அலிகான்..!

•On December 27, 2014
aambala-audio-lunch-stills-34
Share

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள ‘ஆம்பள’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை நடைபெற்றது. இந்தப்படத்திற்கு இசையமைப்பதன் மூலம் ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். பாடல்களையும் அவரே எழுதியுள்ளார்.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ஆர்யா, குஷ்பு, மன்சூர் அலிகான் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர். இந்த விழாவில் பேசிய மன்சூர் அலிகான், “அர்ஜூனுக்கு ஆக்சன் கிங் பட்டம் பொருத்தமா இருக்குற மாதிரி, விஷாலுக்கு ஆக்சன் ஸ்டார்’ன்னு பட்டம் கொடுக்கிறேன்” என்றார்.

இந்தப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்க, முக்கியமான வேடத்தில் சந்தானம், சதீஸ், வைபவ், பிரபு, ரம்யா கிருஷ்ணன் என மிகப்பெரிய நட்சத்திர கூட்டமே உண்டு. விஷாலின் சொந்த நிறுவனம் தயாரித்துள்ள இந்தப்படம் பொங்கலுக்கு ரிலீஸாகிறது.

 ,

 ,

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.