Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

'விவேகம்' மற்றும் 'ஸ்பைடர் ஒரே வாரத்தில் வெளியாகுமா...!

•On May 9, 2017
thalas
Share
thalas ஆக்ஸ்ட் முதல் வாரத்தில் அஜித்தின் 'விவேகம்' மற்றும் மகேஷ்பாபுவின் 'ஸ்பைடர்' ஆகிய படங்கள் வெளியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் 'விவேகம்'. விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு பல்கேரியாவில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்தாண்டு தனது பிறந்த நாளை படக்குழுவினரோடு கொண்டாடி மகிழ்ந்துள்ளார் அஜித். மே 10ம் தேதியோடு மொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. ஜுன், ஜுலை ஆகிய மாதங்களில் இறுதிகட்ட பணிகளை முடித்து ஆகஸ்ட் 10ம் தேதி படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார்கள். இந்நிலையில், ஆக்ஸ்ட் 11ம் தேதி ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்துவரும் 'ஸ்பைடர்' படத்தையும் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. முதலில் ஜூன் 23ம் தேதி வெளியிடத்தான் முடிவு செய்திருந்தார்கள். ஆனால், படப்பிடிப்பு இன்னும் முடிவடையாத காரணத்தால் ஆகஸ்ட் 11ம் தேதி வெளியிட முடிவு எடுத்துள்ளார்கள். அடுத்தடுத்த நாட்களில் பெரிய முதலீட்டு படங்கள் வெளியானால், கடுமையான பாதிப்பு ஏற்படும் என்பதால், ஏதாவது ஒரு படம் பின்வாங்கும் என்று தகவல் பரவி வருகிறது. தமிழில் நாயகனாக மகேஷ்பாபு அறிமுகமாகும் படம் 'ஸ்பைடர்' என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தெலுங்கில் 'ஸ்பைடர்' படத்துக்கு பெரியளவில் ஒப்பனிங் இருந்தாலும், தமிழில் 'விவேகம்' வெளிவருவதால், வேறொரு தேதியில் வெளியிடலாமா என்ற ஆலோசனையில் இறங்கியுள்ளது படக்குழு.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.