Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

விவசாயியின் பெருமையே "கடைக்குட்டி சிங்கம்"..!

•On June 4, 2018
83_19409
Share

பாண்டிராஜ் இயக்கத்தில் இமான் இசையமைப்பில் கார்த்தி, சாயிஷா, பிரியா பவானி சங்கர், அர்த்தனா, சத்யராஜ் மற்றும் பலர் நடிக்கும் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தின் டீசர் நேற்று யு டியூபில் வெளியானது.

தமிழ் சினிமாவில் பல வருடங்களுக்குப் பிறகு விவசாயியின் பெருமையைச் சொல்லும் படமாக இந்தப் படம் இருக்கும் என்ற ஒரு எதிர்பார்ப்பை படத்தின் டீசர் கொடுத்துள்ளது. "படைக்கிறவன் மட்டும் கடவுள் இல்லை, பயிரிடறவனும் கடவுள்தான், நாமெல்லாம் விவசாயின்னு காலரைத் தூக்கி விட்டுக்கிட்டு திரியணும்," என்ற ஒரு வசனமே போதும் இது எந்த மாதிரியான படம் என்று சொல்வதற்கு.

கிராமத்துப் பின்னணில், ஒரு பெரிய குடும்பத்தின் கதை, கூடவே காதல், மோதல் என குடும்பக் கதையாகவும் இந்தப் படம் இருக்கும் எனத் தெரிகிறது. "சொத்தை சேர்த்து வைக்கிறது மட்டும் சேமிப்பில்லம்மா, சொந்தத்தை சேர்த்து வைக்கிறதும் சேமிப்புதான்," என கார்த்தி சென்டிமென்ட்டாகவும் பேசுகிறார். 'சரி செய்யறத சரியா செய்யணும்," என அதிரடியாகவும் பேசுகிறார்.

நேற்று 'சாமி ஸ்கொயர்' படத்தின் டிரைலர் காலையில் வெளியாகி அதிரடியாக முன்னேறி வரும் நிலையில், இரவில் வெளியான 'கடைக்குட்டி சிங்கம்' டீசர் பாராட்டை வாங்கிய அளவிற்கு யு டியூபில் பார்வையை வாங்கவில்லை.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.