விரைவில் திரைக்கு வரும் பாலாவின் ‘நாச்சியார்’...

இயக்குனர் பாலா ‘தாரை தப்பட்டை’ படத்தைத் தொடர்ந்து தற்போது ‘நாச்சியார்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். பெண்ணுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் இந்தப் படத்தில், ஜோதிகா நடிக்கிறார். லோக்கல் ரவுடியாக ஜி.வி.பிரகாஷ் நடிக்கிறார். படத்திற்கு இளையராஜா இசையமைக்கிர். படத்தை பாலா தயாரிக்கிறார்.
பொதுவாக, இயக்குனர் பாலா ஒரு படத்தை இயக்கி முடிக்க குறைந்தது ஒரு வருடமாவது ஆகும். அவர் கற்பனைக்கு ஏற்ப மெதுவாக எடுப்பார். அவர் படத்தில் கமிட்டாகும் நடிகர் &, நடிகைகள், அடுத்த ஒரு வருடத்துக்கு எந்தப் படத்திலும் நடிக்க முடியாது. ஆனால், சில மாதங்களுக்கு தொடங்கப்பட்ட ‘நாச்சியார்’ படப்பிடிப்பில் முக்கால்வாசி முடிந்துவிட்டதாம். அடுத்த மாத இறுதிக்குள் மொத்த படத்தையும் முடித்துவிட்டு, இந்த வருடத்திற்குள்ளேயே ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார் பாலா.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
