Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

விரைவில் ஒளிபரப்பாகவிருக்கும் அம்மா டி.வி!..

•On April 4, 2017
amma t.v.
Share
amma t.v. விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த மடிப்பாக்கம் வேலாயுதம் என்பவர் ஜி டிவி என்ற பெயரில் செய்தித் தொலைக்காட்சி ஒன்றை நடத்திவந்தார். எனினும், போதிய நிதி இல்லாத காரணத்தால், இந்த டிவி அப்படியே கைவிடப்பட்டது. தற்போது இந்த ஜி டிவியை ஓ.பன்னீர்செல்வம் விலைக்கு வாங்கியுள்ளார். இது விரைவில் அம்மா டிவி என்ற பெயரில் தொடங்கப்படும் என கூறப்படுகிறது. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு அரசியல் கட்சியும் தங்களின் கட்சியை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் ஒரு டிவி சேனலை நடத்தி வருகின்றன. திமுகவுக்கு கலைஞர் டிவியும் சன் டிவியும் ஆதரவாக உள்ளன. இதேபோன்று, அதிமுகவுக்கு ஜெயா டிவியும் தேமுதிகவுக்கு கேப்டன் டிவியும் காங்கிரஸ் கட்சிக்கு வசந்த் மற்றும் மெகா டிவிகளும் ஆதரவாக உள்ளன. பாஜகவுக்கு லோட்டஸ் டிவியும், மதிமுகவுக்கு மதிமுகமும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு வெளிச்சம் டிவியும் உள்ளன. அதிமுகவில் பிளவு ஏற்பட்டு ஓபிஎஸ் தனியாக பிரிந்து செயல்பட்டு வருகிறார். தற்போது அதிமுக (புரட்சித் தலைவி அம்மா) என்ற கட்சியின் பெயரில் இயங்கும் ஓபிஎஸ் அணி, தங்களின் நிலைபாட்டை மக்களிடம் கொண்டு சேர்க்க விரைவில் அம்மா டிவி என்ற பெயரில் டிவி சேனல் ஒன்றை தொடங்க உள்ளதாக, தகவல் தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், ஜி டிவியை ஓபிஎஸ் விலைக்கு வாங்கிவிட்டார் என்றும், விரைவிலேயே இந்த டிவியின் ஒளிபரப்பு தொடங்கப்பட வாய்ப்புள்ளதென்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.