விமர்சனங்களுக்கு வர்மாவால் பதிலளித்த பாலா..!

தெலுங்கில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் 'அர்ஜுன் ரெட்டி'. இந்தப் படத்தை தமிழ் மற்றும் மலையாளத்தில் இ4 என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
வர்மா என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நாயகனாக அறிமுகமாகியிருக்கிறார். இயக்குநர் பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு மிகுந்த எதிர்பார்ப்பு.
மேகா ஆகாஷ் என்கிற புதுமுகம் நாயகியாகவும் பிக்பாஸ் புகழ் ரைசா மற்றும் ஈஸ்வரிராவ் ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடித்திருக்கிறார்கள்.
இந்தப்படத்தின் முதல்பார்வை மற்றும் குறுமுன்னோட்டம் செப்டம்பர் 23 அன்று நாயகன் துருவ் விக்ரமின் பிறந்தநாளையொட்டி வெளியிடப்பட்டது.
செப்டம்பர் 23 காலை 11 மணிக்கு வெளியிடப்பட்ட அந்த டீசருக்கு பெரும் வரவேற்பு.வெளியிட்ட 24 மணி நேரங்களில் முப்பது இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்திருக்கின்றனர்.
இந்தக்கதையை பாலா எப்படி கையாளப்போகிறார் என்று அனைவரும் கேள்விக்குறியோடு பார்த்துக்கொண்டிருந்தனர். அவர்கள் அனைவருமே டீசரைப் பார்த்து வியந்துபோயுள்ளனர்.


Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
