விநாயகர் சதுர்த்தியுடன் சேர்ந்து ‘மெட்ராஸ்’ ரிலீஸ்..?

நெரிசல் இல்லாமல் பயணிப்பதற்காக, பயணத்தில் இருந்து சற்று ஒதுங்கியிருக்கிறது கார்த்தி நடித்த ‘மெட்ராஸ்’ திரைப்படம். ஏற்கனவே தனுஷின் ‘வேலை இல்லா பட்டதாரி’ மற்றும் திருப்பதி பிரதர்ஸின் ‘சதுரங்க வேட்டை’ ஆகிய படங்களுடன் ‘மெட்ராஸ்’ படமும் ஜூலை-25ல் ரிலீஸாவதாகத்தான் பிளான்.
ஆனால் இரண்டு படங்களுக்கும் நல்ல எதிர்பார்ப்பு இருந்ததால் தியேட்டர்களை பகிர்ந்துகொள்வதில் சிக்கலும் இருந்தது. அடுத்த இரண்டு வாரங்களிலேயே ‘ஜிகர்தண்டா’ மற்றும் ‘சரபம்’ ஆகியவை ரிலீசுக்கு தயாராக இருந்தது.
அதனால் வெற்றியை சிந்தாமல் சிதறாமல் ருசிக்க முடிவு செய்த ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் ‘மெட்ராஸ்’ படத்தின் ரிலீசை தள்ளிவைத்தது. அதே நேரம் கார்த்தியின் அண்ணன் சூர்யா நடித்துள்ள ‘அஞ்சான்’ படம் வரும் ஆகஸ்ட்-15ல் ரிலீசாக இருக்கிறது.
அதனால் அதற்கு இரண்டு வாரம் ப்ரீயாக ஓட இடம் விட்டு, வரும் ஆகஸ்ட்-29 அன்று ‘மெட்ராஸ்’ படத்தை விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்துடன் ரிலீஸ் செய்ய பிளான் செய்திருக்கிறார்களாம். ஆனால் அதே தேதியில் தான் பார்த்திபன் தனது ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தை வெளியிட இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
