வித்யாபாலன் ரூட்டில் லட்சுமி மேனன்..!

மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்து இங்கயுந்தவர்களால் புறக்கணிக்கப்பட்டு பின்னர் இந்திக்கு சென்று வெற்றிக்கொடி நாட்டியவர் வித்யாபாலன். இந்தி சினிமாவில் இவர் ஏற்கும் கதாபாத்திரங்கள் எல்லாம் சாதாரண நடிகைகள் ஏற்க தயங்கும் வித்தியாசமான துணிச்சலான கதாபாத்திரங்கள் தான்.
விஷயம் என்னவென்றால் தற்போது தமிழில் லீடிங்கில் இருக்கும் லட்சுமி மேனன் வித்யாபாலன் ஸ்டைலை பின்பற்ற ஆரம்பித்துவிட்டார் என்பதுதான். அதற்காக அவரைப்போல டர்ட்டி பிக்சர் போன்ற படங்களில் நடிகக் இறங்கிவிட்டார என பயப்படவேண்டாம்.
வித்யாபாலன் படங்களில் நடிக்கும் வேடங்கள் தான் அப்படி இப்படி இருக்குமே தவிர அவர் வெளிய்டங்களுக்கு, குறிப்பாக விழாக்களுக்கு வரும்போது பாரம்பரிய உடையான சேலை அணிந்து கூந்தலை பிரித்து போட்டபடி வருவது ரொம்பவே பிரசித்தம். தற்போது அதே ஸ்டைலில் லட்சுமி மேனனும் விழாக்களுக்கு வர ஆரம்பித்திருப்பதுதான் ஹைலைட்..
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
