விட்டதை பிடித்தார் காஜல் அகர்வால்..!

விஜய், அஜித், சூர்யா என இரண்டாம் தலைமுறை முன்னணி நடிகர்களுடன் மட்டுமே நடித்துவரும் காஜல் அகர்வால் தனுஷ், சிம்பு என அடுத்தகட்ட நடிகர்களின் பக்கம் தனது பார்வையை திருப்பாமல் இருந்தார்.
இப்போது ‘காதலில் சொதப்புவது எப்படி’ புகழ் பாலாஜி மோகன் இயக்கும் புதிய படத்தில் காஜலின் குறை தீர்ந்திருகிறது. ஆம்.. ராதிகா மற்றும் சரத்குமார் இணைந்து தயாரிக்கும் இந்தப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.
ஏற்கனவே ‘பொல்லாதவன்’ படத்தில் தனுஷுடன் நடிப்பதற்கு வந்த வாய்ப்பை இழந்த காஜல் இப்போது தனுஷுடன் இந்தப்படத்தில் இணைவது குறிப்பிடத்தக்கது. இதன் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
