Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

விஞ்ஞானி நம்பி நாராயணனாக மாறும் மாதவன் !

•On March 21, 2018
madi
Share
madi "இறுதிச்சுற்று", "விக்ரம் வேதா" என்று தொடர்ந்து வெற்றி படங்களை அளித்து வருகிறார் நடிகர் மாதவன். நல்ல படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் மாதவன் இடையில், "பிரீத்" என்ற ஆன்லைன் சீரியஸ் ஒன்றிலும் நடித்திருந்தார். அதற்கு, விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் பெற்றுள்ளார். இந்நிலையில், நடிகர் மாதவன் அடுத்ததாக  புகழ்பெற்ற விண்வெளி விஞ்ஞானி நம்பி நாராயணின்  வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இப்படத்தின் கதை சுயசரிதையான ‘ரெடி டு பயர்: ஹவ் இண்டியா அண்ட்  சர்வைவ்டு தி இஸ்ரோ ஸ்பை’ என்ற புத்தகத்தின் அடிப்படையாக கொண்டது என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் படம் 1994 ஆம் ஆண்டில், நம்பி நாராயணன் மாலத்தீவுகளின் உளவாளி என்று குற்றம் சாட்டப்பட்ட போது அவர் எதிர்கொண்ட பல்வேறு உடல் மற்றும் மனரீதியான பிரச்சனைகளையும் பின்னர் அவர் குற்றமற்றவர் என விடுதலை செய்யப்பட்டது பற்றியும் பேசும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.