விஜய் ரசிகர்களுக்கு இரட்டிப்பு கொண்டாட்டம்...

நமது தமிழ் சினிமா துறையில் எப்பொழுதும் தல தளபதி ரசிகர்கள் இடையே சண்டையிட்டு கொள்வார்கள். இது அனைவரும் அறிந்ததே தற்பொழுது கூட அஜீத்தின் பிறந்த நாள் வந்தது. சின்னச் சின்ன சல சலப்பு வந்தன இருந்தாலும் நல்ல படியாக கொண்டாடினர். அதே போன்று இப்பொழுது வருகின்ற ஜூன் 22 அன்று விஜய்யின் பிறந்த நாளில் ரசிகர்கள் கொண்டாடும் விதமாக இரட்டிப்பு விருந்து வரவிருக்குது.
அதாவது என்ன வென்றால் தற்பொழுது நடித்து வரும் "விஜய் 61" இந்த படத்தில் முதன்முறையாக அப்பா-மகன்கள் என மூன்று விதமான வேடங்களில் நடிக்கிறார் விஜய். இதற்கு முன்பு இரண்டு வேடங்களில் நடித்த போது பெரிய வித்தியாசம் காட்டி நடிக்காத விஜய். இந்த படத்தில் நிறைய வித்தியாசம் காட்டி நடிக்கிறார். காஸ்டியும், ஹேர்ஸ்டைலில் புதுமை செய்பவர், பர்பாமென்சிலும் மூன்று வேடங்களிலுமே ஒன்றுக்கொன்று டச் இல்லாத மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்துகிறாராம்.
மேலும் இந்த படம் மதுரையை கதைக்களமாக கொண்டபோதும், வெளிநாட்டில் இளவட்ட விஜய், மெடிக்கல் காலேஜில் படிப்பதால் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் தற்போது ஐரோப்பாவில் படமாகி வருகிறது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் விஜய் பிறந்த நாளான ஜூன் 22-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. அதுமட்டுமின்றி அன்றைய தினத்தில் விஜய்யின் அடுத்த படம் குறித்த அறிவிப்பும் வெளியாகிறதாம். விஜய்யின் அடுத்த படத்தை துப்பாக்கி, கத்தியைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார் என்று கூறப்பட்டு வரும்நிலையில். அன்றைய தினம் அது உறுதி செய்யப்படும் என்று தெரிகிறது.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
