விஜய் சேதுபதி _ விஷ்ணு விஷால் நடிக்கும் ‘இடம் பொருள் ஏவல்.’ ஆகஸ்டில் ரிலீஸ்!

விக்ரம் வேதா’ அதிரிபுதிரி ஹிட்டடித்ததில் விஜய் சேதுபதியின் மார்க்கெட் முன்னைவிட எகிறியிருக்கிறது!
விஷ்ணு விஷாலும் முன்னணி ஹீரோவாக உருவாகி வருகிறார்!
இதுதான் சந்தர்ப்பம் என்று இரண்டு வருடங்களாக கிடப்பில் இருந்த ‘இடம் பொருள் ஏவல்’ படத்தை ரிலீஸ் செய்யும் வேலையில் இறங்கியிருக்கிறது படத் தயாரிப்பு நிறுவனம்.
சீனு. ராமசாமி இயக்கிய இந்தப் படத்தை, மும்பையில் சிலருக்குத் திரையிட்டு காட்டியுள்ளார்கள். மொழி தெரியாத பலர் படத்தைப் பார்த்து விட்டு கிளைமாக்ஸில் எழுந்து நின்று கைதட்டி பாராட்டினார்களாம்.
'இடம் பொருள் ஏவல்' படத்தில்தான் இசையமைப்பாளர் யுவனும், வைரமுத்துவும் முதல் முறையாக இணைந்தார்கள் என்பது முக்கியச் செய்தி!
விஜய் சேதுபதி நடிக்க, சீனு ராமசாமி இதற்கு முன் இயக்கிய 'தர்மதுரை' படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. அதனால், 'இடம் பொருள் ஏவல்' படத்திற்கும் வினியோகஸ்தர்களிடமும் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
சீனு ராமசாமி தன்னுடைய அடுத்த பட வேலைகளில் பிஸியாகி விட்டார். விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் அந்தப் படத்தின் பெயர் ‘மாமனிதன்!’
இந்தப் படத்தை யுவன்ஷங்கர் ராஜா தயாரிக்கிறார் என்பதும், இந்தப் படத்திற்கு இளையராஜாவும், யுவனும் சேர்ந்து இசையமைக்க உள்ளார்கள் என்பதும் படம் குறித்த கூடுதல் செய்தி!Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
Previous Postபைக்காரா அணையில் களைகட்டுமா படகுச் சவாரி!
Next Postஇன்றைய பெட்ரோல், டீசல் விலை !
