விஜய் சேதுபதியை கழுவி ஊத்திய ரசிகர்கள்....

உலகமெங்கும் தற்போது ரிலீஸ் ஆகியுள்ள ஹாலிவுட் திரைப்படம் "அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்". இப்படம் தமிழில் மொழிப்பெயர்க்கப்பட்டு, தமிழகத்தில் ரிலீஸ் செய்துள்ளனர்.
இப்படத்தில் உள்ள 'அய்யன் மேன்' கதாபாத்திரத்திற்கு நடிகர் விஜய் சேதுபதி பின்னணி குரல் கொடுத்துள்ளார்.
விஜய் சேதுபதி இதற்கு முன்பு பல படங்களுக்கு, வேறு நடிகர்களுக்கு பின்னணி குரல் கொடுத்திருந்தாளும், அவருடைய குரல் சற்றும்.இந்த 'அய்யன் மேன்' கதாபாத்திரத்திற்கு ஒத்து போகவில்லையாம்.
இன்று சென்னையில் காலை சிறப்பு காட்சி திரையிடப்பட்டுள்ளது. அப்போது படம் பார்த்தவர்கள் 'அவெஞ்சர்ஸ்' ரசிகர்கள் ஆவர். படம் முடிந்து வெளியே வரும் பார்வையாளர்களை, சில காணொளி ஊடகங்கள் படம் பற்றி விசாரித்துள்ளனர். அப்போது அந்த ரசிகர்கள் படத்தை வெகுவாக பாராட்டினார்கள். அதனோடு விஜய் சேதுபதியின் பின்னணி குரல் தான் இந்த படத்திற்கு பெரிய மைனஸ் என்று பெரும்பாலானோர் குறை சொல்லி சென்றுள்ளனர். இதை காதில் கேட்ட ரசிகர்கள், என்னடா விஜய் சேதுபதியை இப்படி கழுவி ஊத்துகிறார்கள் என்று புலம்பியப்படியே சென்றுள்ளனர்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
