விஜய் சேதுபதியுடன் திரிஷா நடிக்கும் "96" படத்தின் பூஜை இன்று...

மெட்ராஸ் என்டர் பிரைசஸ் எஸ்.நந்த கோபால் அடுத்து தயாரிக்கும் படம் ‘96’. இந்த படத்தில் முதல் முறையாக விஜய் சேதுபதியுடன் திரிஷா ஜோடி சேர்ந்து நடிக்கிறார். இந்த படத்தை புதுமுக இயக்குனர் சி.பிரேம் குமார் இயக்குகிறார். இவர், விஜய் சேதுபதிக்கு பெயர் வாங்கி கொடுத்த ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தின் ஒளிப்பதிவாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் காதலர் தினமான பிப்ரவரி 14-ந் தேதி வெளியானது. இப்படத்தில் காளிவெங்கட் வினோதினி நடிக்கிறார்கள். மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
ஒளிப்பதிவு - சண்முகசுந்தரம்
இசை - கோவிந்த் மேனன்
எடிட்டிங் - கோவிந்தராஜ்
கலை - வினோத் ராஜ்குமார்
பாடல்கள் - உமாதேவி, கார்த்திக் நேத்தா.
எழுத்து, இயக்கம் - C.பிரேம்குமார்.
மேலும் இந்த படத்தின் துவக்க விழா ஜுன் 12 ( இன்று ) சென்னையில் நடைபெற்றது விழாவில் நாயகன் விஜய்சேதுபதி, நாயகி திரிஷா, இயக்குனர் பிரேம்குமார், தயாரிப்பாளர் எஸ்.நந்தகோபால், ஒளிப்பதிவாளர் சண்முகசுந்தரம், இசையமைப்பாளர் கோவிந்த் மேனன், பாடலாசிரியர் உமாதேவி மற்றும் இயக்குனர் லஷ்மன், இசையமைப்பாளர் பைசல் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அந்தமானில் விஜய்சேதுபதி, திரிஷா சம்மந்தப்பட்ட முக்கிய காட்சிகள் படமாக்கப்பட உள்ளது. அத்துடன் கல்கத்தா ராஜஸ்தான் பாண்டிச்சேரி கும்பகோணம் சென்னை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
Previous Postஇங்கேயும் தீ விபத்தா...
