விஜய் ஆண்டனி படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட சிரஞ்சீவி

'எமன்' படத்தைத் தொடர்ந்து தற்போது அண்ணாதுரை, காளி என ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் விஜய் ஆண்டனி. ராதிகா சரத்குமார் தயாரிப்பில் உருவாகும் அண்ணாதுரை படத்தை அறிமுக இயக்குனர் சீனிவாசன் என்பவர் இயக்குகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. அண்ணாதுரை படத்தில் விஜய் ஆண்டனி இரட்டை வேடத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. இசையமைப்பாளராக இருந்து நடிகரான விஜய் ஆண்டனி, அண்ணாதுரை படத்துக்கு இசையமைப்பதோடு, இப்படத்தில் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். விஜய் ஆண்டனி நடிப்பில் தமிழில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற 'பிச்சைக்காரன்' திரைப்படம் தெலுங்கில் 'பிச்சகாடு' என்ற பெயரில் டப் செய்து ரிலீஸ் செய்யப்பட்டது. தமிழ்நாட்டைப்போலவே ஆந்திராவிலும் அந்தப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது.
அந்த வெற்றியை பணம் பண்ணும் வகையில், 'அண்ணாதுரை' படத்தை 'இந்திரசேனா' என்ற பெயரில் தெலுங்கில் வெளியிடுகின்றனர். நேரடி தெலுங்குப்படம் போல் வெளியிடும் திட்டத்தில், 'இந்திரசேனா'வின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ஆந்திராவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியை வைத்து வெளியிட்டுள்ளனர். அண்ணாதுரை படத்தின் தயாரிப்பாளரான ராதிகாவுக்கு, சிரஞ்சீவி நண்பர் என்பதால் அவரை வைத்து 'இந்திரசேனா'வின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட வைத்துள்ளார்.

Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
