Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

விஜய்-அஜித் ரசிகர்களுக்குள் புகைமூட்டிய பைக் வீராங்கனை..!

•On November 3, 2014
14alisha-abdullah4
Share

பைக் வீராங்கனை அலிஷா அப்துல்லாவை தெரியும் தானே.. ‘இரும்பு குதிரை’ படத்தில் கூட வில்லன் ஜானியின் ஜோடியாக நடித்திருந்தாரே அவர்தான். தற்போது அவர் டிவிட்டரில் பகிர்ந்துகொண்ட கருத்து ஒன்றுதான் மேற்படி தலைப்புடன் கூடிய இந்த செய்திக்கு காரணமாக அமைந்திருக்கிறது. அப்படி அவர் என்ன சொல்லிவிட்டார்..?

“இதுவரை நான் யாருக்கும் ரசிகையாக இருந்தது கிடையாது. ஆனால் ‘கத்தி’ படத்தை பார்த்ததில் இருந்து விஜய் மிகப்பெரிய ரசிகையாக மாறிவிட்டேன்” இதுதான் அவரையறியாமலேயே அவர் கொளுத்திப்போட்ட திரி. இதைக்கண்டு வெகுண்டெழுந்த அஜித் ரசிகர்கள் இனையதளத்தில் அலிஷாவை திட்டித்தீர்த்து வருகிறார்கள்.. கூடவே விஜய்யையும்.

அலிஷா மீது ஏன் இவ்வளவு கோபம்.. அலிஷா பைக் வீராங்கனை. அஜித்தும் பைக் ரேஸ் வீரர்.. அதனால் நேரம் கிடைக்கும்போதெல்லாம் அஜித்தின் புகழ் பாடிவந்தார் அலிஷா. அதனால் அவரை தங்கள் தரப்பு ஆளாக நினைத்து வந்த அஜித் ரசிகர்களுக்கு அலிஷா தான் இப்போது விஜய் ரசிகை என கூறியது அதிர்ச்சியை தர, அதன் விளைவு தான் இந்த தாக்குதலாம்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.