Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

விஜய்யின் "சர்க்கார்" தலைப்பை கொண்டாடும் விஜய் ரசிகர்கள்..!

•On June 22, 2018
s1
Share
அருமையான தலைப்பு என்று விஜய் ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்துள்ளனர். எதற்கு தெரியுங்களா. விஜய் பிறந்தநாளை முன்னிட்டு தற்போது அவர் நடித்து வரும் படத்தின் தலைப்பை அறிவித்துள்ளனர். விஜய்யின் ரசிகர்கள் அனைவரும் 2 நாட்களாக தூங்காமல் இருந்தனர் என்பதுதான் உண்மை. எப்போது 21ம் தேதி மாலை 6 மணி ஆகும் என்று தவியாய் தவித்து வந்தனர். அது விஜய் நடித்து வரும் படத்தின் பெயரை அறிந்து கொள்ளத்தான். சொன்னபடி நேற்று மாலை விஜய்யின் படம் அறிவிப்பு வெளியானது. 62வது படத்தின் டைட்டில் சர்கார். இதை விஜய் ரசிகர்கள் உலக அளவில் ட்ரெண்ட் செய்து மாஸ் காட்டி வருகின்றனர். மேலும் மெர்சல் தான் அதிகமாக RT ஆன பர்ஸ்ட் லுக்காக இருக்க, இதை எப்படியாவது முறியடிக்க வேண்டும் என விஜய் ரசிகர்கள் கடுமையாக முயற்சி செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.