Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

விக்ரம் பிரபு ஜோடியாக காவ்யா - கீர்த்தி ..! இயக்குகிறார் விஜய்..!

•On August 25, 2014
Vikram-Prabhu joint
Share

தயாரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீபனும் ராடன் பிக்சர்ஸ் சார்பாக ராதிகாவும் சேர்ந்து மலையாளத்தில் வெற்றிபெற்ற 'உஸ்தாத் ஹோட்டல்' படத்தை தமிழில் ‘தலப்பாக்கட்டி’ என்ற பெயரில் ரீமேக் படமாக தயாரிக்கிறார்கள். இவர்கள் இருவரும் சேர்ந்து ஏற்கனவே ‘சென்னையில் ஒரு நாள்’ படத்தை தயாரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது ‘தலப்பாக்கட்டி’யில் விக்ரம் பிரபுவுடன் ஏற்பட்ட நட்பால் அவரை வைத்து இன்னொரு படத்தையும் தயாரிக்க இருக்கிறார் லிஸ்டின் ஸ்டீபன். இந்தப்படத்தை இயக்குகிறார் ஏ.எல்.விஜய். ‘சைவம்’ படத்திற்கு பிறகு தனது பாதையில் இருந்து மாறி ஒரு முழு நீள ரொமாண்டிக் படமாக இதை உருவாக்க இருக்கிறாராம் விஜய்.

இந்தப்படத்தில் கதாநாயகியாக ஏற்கனவே மலையாள இளம் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் ஆகிவிட்டார். இவர் ரஜினிக்கு ஜோடியாக ‘நெற்றிக்கண்’ படத்தில் நடித்த முன்னாள் நடிகை மேனகாவின் மகள் ஆவார்.

இப்போது இன்னொரு கதாநாயகியாக பெங்களூரை சேர்ந்த காவ்யா ஷெட்டி நடிக்கிறார். இவர் பிளாஸ்பேக் காட்சிகளில் மட்டும் வருகிறாராம். சமீபத்தில் விக்ரம் பிரபு காவ்யா ஷெட்டி இருவருக்குமான போட்டோஷூட் நடைபெற்றுள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.