விக்ரம்பிரபுவின் தாய்மாமனாக நடிக்கிறார் வடிவேலு..!

வெகு நாட்களாக படங்கள் எதிலும் நடிக்காமல் இருந்த வடிவேலு தனது ரீ-எண்ட்ரி படம் மெகா ஹிட்டாக இருக்க வேண்டும் என்று ‘தெனாலிராமன்’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். படத்தை யுவராஜ் தயாளன் என்பவர் இயக்கினார். நீண்ட நாட்கள் கழித்து வடிவேலுவின் படம் வெளியானாலும் படத்திற்கு வரவேற்பு ஒன்றும் பலமாக இல்லை....
இருந்தாலும் தொடர்ந்து வேறு எந்த ஹீரோவின் படத்திலும் காமெடியனாக நடிக்க விரும்பாத வடிவேலு, மீண்டும் இதே இயக்குனரின் அடுத்த படமான ‘எலி’யிலும் ஹீரோவாகவே நடிக்கிறார்.
இந்த நிலையில் எழிலின் உதவியாளர் முருகய்யா இயக்கம் படத்தில் காமெடியனாக நடிக்க சம்மதித்திருக்கிறார வடிவேலு. இதில் ஹீரோவாக நடிக்கும் விக்ரம்பிரபுவின் தாய்மாமன் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறாராம் வடிவேலு.. இந்தப்படம் வரும் பிப்ரவரி மாதம் துவங்க இருக்கிறது.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
