விக்ரமுக்கும் ராம்தாஸுக்கும் என்ன சம்பந்தம்..?

புது இயக்குனர்கள் தங்களது படத்திற்கு ‘கேட்சிங்’கான டைட்டில் வைத்து ரசிகர்கள் மத்தியில் படத்தை பற்றிய ஓர் ஆர்வத்தை ஏற்படுத்துவது வழக்கம். அதாவது டைட்டில் தமிழிலும் இருக்கவேண்டும்.. அதே சமயம் வித்தியாசமாக இருக்கவேண்டும்.. இதுதான் அவர்கள் கான்செப்ட். இதே பாணியில் தான் இப்போது இயக்குனர் விஜய்மில்டன் டைரக்ஷனில் விக்ரம், சமந்தா நடிக்கும் படத்திற்கு கூட ‘பத்து எண்றதுக்குள்ள’ என பயம் காட்டும் டைட்டிலை வைத்துள்ளார்கள்.
நிற்க.. தற்போது சொல்ல வந்த விஷயம் இது இல்லை.. ‘முண்டாசுப்பட்டி’யில் முனீஸ்காந்தாக காமெடியில் அதகளம் பண்ணிய ராம்தாஸை மறந்திருக்க மாட்டீர்கள் தானே.. அந்த ராமதாஸுக்கு இப்போது ஜாக்பாட் அடித்திருக்கிறது.
ஆமங்க.. ‘பத்து எண்றதுக்குள்ள’ படத்தில் விக்ரமின் நண்பராக படம் முழுவதும் வரும் கேரக்டரில் நடிக்கிறார் ராமதாஸ். இதில் இன்னொரு ஆச்சர்யம் என்னவென்றால் இவரது கேரக்டர் கூட முண்டாசுப்பட்டி படத்தின் தொடர்ச்சியாகவே பின்னப்பட்டுள்ளதாம். அதாவது முண்டாசுப்பட்டி முனீஸ்காந்த்தின் மகனாக இந்தப்படத்தில் நடிக்கிறார் ராம்தாஸ்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
