வால்பாறையில் கொடியேற்றத்துடன் துவங்கிய முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழா !

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் 66-ம் ஆண்டு, பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 30-ம் தேதி வெள்ளிக்கிழமை, காலை 5 மணிக்கு, கணபதி ஹோமமும், காலை 10 மணிக்கு, நல்லகாத்து ஆற்றிலிருந்து, திருமஞ்சள் தீர்த்தமும் கொண்டுவரப்படும்.
31-ம் தேதி காலை 5 மணிக்கு கணபதி ஹோமமும், காலை 8 மணிக்கு அண்ணா நகர் பி.கெ.சின்னையன் குழுவினர், காவடிக்குழு, முருக பக்தர்கள் மற்றும் அண்ணா நகர் இளைஞர் குழுவினர், சேலம் மாதேஷ் சுத்து காவடி, அங்கு காவடி மற்றும் பறவைக்காடிகள் எடுத்து வரப்படும்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
