Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

வரும் 2018-ன் விடுமுறை தினங்களை அறிவித்த தமிழக அரசு !

•On November 9, 2017
tn_government
Share
tn_government மத்திய அரசின் செலாவணி முறிச்சட்டத்தின்கீழ் 2018-ம் ஆண்டுக்கான 23 அரசு விடுமுறை தினங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக தலைமைச் செயலர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய அரசின் உள்துறை விவகாரங்கள் அமைச்சகத்தின் அறிக்கை படி, செலாவணி முறிச்சட்டத்தின் 25-ம் பிரிவின் கீழ், ஞாயிற்றுக்கிழமைகளுடன் சேர்த்து, பின்வரும் நாட்கள் 2018-ம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்களாக கொள்ளப்படும். இதில், ஏப்ரல் 1-ம் தேதி ஆண்டு வங்கி கணக்கு முடிவுக்கான விடுமுறை, தமிழகத்தில் உள்ள வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டுமே பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், நான்கு விடுமுறைகள் ஞாயிற்றுக்கிழமைகளில் வருகிறது. ஆங்கிலப் புத்தாண்டு ஜனவரி 1 திங்களன்று வருவதால், இந்தாண்டு டிசம்பர் 30,31 உடன் சேர்த்து 3 நாட்கள் விடுமுறை வருகிறது. பொங்கல் ஞாயிற்றுக்கிழமையில் வருவதால், முந்தைய சனிக்கிழமை ஜன.13-ம் தேதியுடன் சேர்த்து, 4 நாட்கள், மார்ச் 29, 30, 31, ஏப் 1 ஆகிய 4 நாட்கள், ஜூன் மாதம் 15, 16, 17 ஆகிய 3 நாட்கள், செப் 21, 22, 23 ஆகிய 3 நாட்கள், அக், 18, 19, 20, 21 ஆகிய 4 நாட்கள் தொடர் விடுமுறையாக வருகிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.