Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

வட சென்னை படத்தில் அமீர்-ஆண்ட்ரியா முதலிரவு காட்சி நீக்கம்..!

•On October 26, 2018
6f4ef01267b16e44fc659cff0ec681b4
Share
இயக்குநர் வெற்றி மாறனின் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் அக்டோபர் 17-ம் தேதி வெளியான 'வடசென்னை' திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெற்றிகரமாக 10 நாட்களை கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் படத்தில் அமீர் ,ஆண்ட்ரியா நடிப்பில் இடம் பெற்றிருந்த முதலிரவு காட்சி, மீனவ சமுதாய சகோதர, சகோதரிகளின் மனம் புண்படும்படி இருந்ததாகவும் அக்காட்சியை படத்தில் இருந்து நீக்கும்படியும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். தற்போது படக் குழு அந்த காட்சியை நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக அமீர், ஆண்ட்ரியா நடித்துள்ள வேறு இரு காட்சிகளை இணைத்துள்ளனர். மேலும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும் வசனங்கள் சில நீக்கப்பட்டிருப்பதாகவும் படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.