வசூல் வேட்டையில் டிக் டிக் டிக்..!

செம வசூல் வேட்டை நடத்தி ஹிட் படங்களின் வரிசையில் சேர்ந்துள்ளது டிக் டிக் டிக் படம் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சில வாரங்களுக்கு முன் திரைக்கு வந்த படம் டிக் டிக் டிக். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. லாஜிக் மீறல்கள் இருந்தாலும் ரசிகர்களுக்கு டிக் டிக் டிக் படத்தின் மேஜிக் பிடித்துவிட்டதால் படம் வசூல் வேட்டை ஆடி உள்ளது.
நேமிசந்த் ஜபக், வி ஹிதேஷ் ஜபக் தயாரிப்பில், சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ் நடித்துள்ள படம் டிக் டிக் டிக். இந்தியாவின் முதல் விண்வெளி திரைப்படமான இந்த படத்தில் ஜெயம் ரவியின் மகனாக அவரது சொந்த மகன் ஆரவ் ரவி நடித்திருந்தார். கடந்த வாரம் வெளியான இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதனை தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்து நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் ஆரவ் ரவி பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் கேக் வெட்டி தன் பிறந்த நாளையும் கொண்டாடினார்.
இப்படம் தமிழகத்தில் மட்டுமே ரூ 3.5 கோடி வரை வசூல் செய்துவிட்டதாம். இதன் மூலம் இந்த வருடத்தில் கலகலப்பு-2, இரும்புத்திரை, இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தை தொடர்ந்து டிக் டிக் டிக் படமும் வெற்றி படமாகியுள்ளது.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
