Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ரோபோவை மணந்த சீனா இன்ஜினியர்!..

•On April 5, 2017
robo
Share
robo சீனாவில் பெண் கிடைக்காததால், இன்ஜினியர் ஒருவர் ரோபோவை திருமணம் செய்து கொண்டுள்ளார். சீனாவில் ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக் கொள்ள அந்நாட்டு அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதனால் பெரும்பாலான தம்பதியர் ஆண் குழந்தைகளை மட்டுமே தேர்வு செய்து பெற்றுக் கொண்டனர். இதனால் சீனாவில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைந்துள்ளது. இதன் விளைவாக சீனாவில் பெண்கள் கிடைக்காமல் ஏராளமான ஆண்கள் அதிக வயதான பிறகும் திருமணம் செய்து கொள்ளமல் உள்ளனர். இந்நிலையில் செங் ஜியா ஜியா என்ற 31 வயது இளைஞர், ரோபோ ஒன்றை திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும் ரோபோ இன்ஜினியரான இவர், தான் விரும்பியபடி பெண் ரோபோ ஒன்றை தயாரித்து, அதனையே திருமணமும் செய்து கொண்டுள்ளார். அந்த ரோபோவிற்கு இங் இங் என பெயரிட்டுள்ளார். இந்த ரோபோட்டின் எடை 30 கிலோ. இதனால் சில வார்த்தைகளை பேச முடியும். கேட்ட கேள்விகளுக்கு பதிலும் சொல்லும்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.