ரெட்டைச்சுழி பட நாயகன் ஆரி நடிக்கும் த்ரில்லர் மூவி!

ரெட்டைச்சுழி படத்தில் அறிமுகமாகி அதன் பிறகு நெடுஞ்சாலை, மாயா உள்ளிட்ட பல படங்களில் நடித்தாவர் ஆரி. தற்போது சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்தில் நடிக்கிறார். இதில் ஆரி ஜோடியாக ஸ்மிருதி நடிக்கிறார். இவர்கள் தவிர மதுசூதனன், ஹரிஷ்பேடி, அருள்ஜோதி, உபாசனா உள்பட பலர் நடிக்கிறார்கள். எஸ்.ராஜசேகர் தயாரிக்கிறார், பாருக்பாஷா ஒளிப்பதிவு செய்கிறார், ஜாவித் ரியாஸ் இசை அமைக்கிறார். களம் படத்தை இயக்கிய ராபர்ட்இயக்குகிறார்.
மௌனவலை படத்தை பற்றி ஆரி கூறியதாவது:
மாயா படத்திற்கு பிறகு நான் நடிக்கும் சஸ்பென்ஸ் த்ரில்லர் படம். மற்ற படங்களிலிருந்து இது மாறுபட்டதாக இருக்கும். துடிப்பான ஒரு இளைஞன் வாழ்க்கையில் வேலை, காதல் என்று சந்தோஷமாக இருக்கிறான். ஆனால் அவனை அறியாமலேயே அவனைச்சுற்றி ஒரு வலை பின்னப்படுகிறது. அந்த வலை முற்றிலும் அவனை சுற்றியபிறகுதான் அவனுக்கு விஷயமே தெரிய வருகிறது. அதிலிருந்து அவன் எப்படி வெளியே வருகிறான் என்பதுதான் படத்தின் கதை. என்கிறார் ஆரி.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
