Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ரூ25 கோடி மதிப்புள்ள மரகதலிங்கம் மீட்பு!

•On March 18, 2017
maragatham
Share
maragatham சேலம் அருகே தாரமங்கலத்தில் காரில் கடத்தப்பட்ட, 25 கோடி ரூபாய் மதிப்புள்ள மரகதலிங்கம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், ஐ.ஜி., பொன்மாணிக்கவேல் தலைமையில், சேலம் அருகே உள்ள தாரமங்கலத்தில் மாறு வேடத்தில் முகாமிட்டு இருந்தனர். அங்கு இன்னோவா காரில், 25 கோடி ரூபாய் மதிப்புள்ள, ஏழு கிலோ எடை கொண்ட மரகதலிங்கம் கொண்டு செல்லப்படுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் காரை மடக்கி பிடித்து, காரில் இருந்த மரகதலிங்கத்தை பறிமுதல் செய்தனர். காரில் பயணம் செய்த ஒரு பெண் உட்பட, ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.