ரூபாய் நோட்டில் பவர்ஸ்டார் படம்.. சிக்கலில் மாட்டிவிட்ட ரசிகர்..!

‘சேரன் பாண்டியன்’ படத்தில் மனைவியை கொஞ்சிக் குலாவும் கவுண்டமணியிடம் சென்று “அண்ணே ஒண்ணாம் வகுப்பு டீச்சர் உங்களை கேட்டாங்க” என போகிறபோக்கில் கொளுத்திப்போடுவிட்டு போவார் செந்தில்.. பிறகென்ன பொண்டாட்டியிடம் மண்டகப்படி தான்..
அப்படி ஒரு சிக்கலில் தான் இப்போது மாட்டியுள்ளார் பவர்ஸ்டார்.. இவர் நம்ம பவர்ஸ்டார் இல்லைங்க.. ஒரிஜினல் தெலுங்கு பவர்ஸ்டார் பவன் கல்யாண்.. சில நேரம் ஆர்வக்கோளாறு ரசிகர்களின் அட்ராசிட்டிகளுக்கு அளவே இல்லாமல் போய்விடும்..
அப்படி யாரோ ஒரு ரசிகர்தான் 50 ரூபாய் நோட்டில் மகாத்மா காந்தி படத்தை எடுத்துவிட்டு அந்த இடத்தில் பவன் கல்யாணின் படத்தை வைத்து, நெட்டில் உலாவ விட்டிருக்கிறார். இது குறித்து பவன் கல்யாண் மேல் ஒரு புண்ணியவான் வழக்கு தொடர்ந்துள்ளார்.. இருந்தாலும் போலீசார் யார் அந்த ஆர்வக்கோளாறு ரசிகர் என தேடி வருகிறார்கள்..
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
