Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ரீலிஸானது விவேகம், தியேட்டரில் தல ரசிகர்கள் கொண்டாட்டம்!

•On August 24, 2017
today2
Share
today2 தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்களுக்கு ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்பு 'முதல்நாள் முதல்காட்சி'யில் தெரிந்துவிடும். அஜித் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் 'விவேகம்' படத்திற்கு ரசிகர்களுக்கான பிரத்யேக காட்சிகள் அதிகாலை 4 மணிக்குத் தொடங்கிவிட்டது. சென்னை ரோகிணி திரையரங்கில் போலீஸ் அதிகாரிக்கும் அஜித் ரசிகர்களுக்குமான பிரச்னை காரணமாக படம் திரையிடுவதில் தாமதம் ஏற்பட்டது. சைதை ராஜ் திரையரங்கில் ரசிகர்கள் பட்டாசு வெடித்து முதல் காட்சியைத் தொடங்கிவைத்து ரசித்தார்கள். today1 எழும்பூர் ஆல்பர்ட் மற்றும் வடபழனி ஏ.வி.எம் ராஜேஸ்வரி திரையரங்குகளில் அதிகாலைக் காட்சி இல்லை என்றாலும், அஜித் கலைத்துவிட்டாலும், அஜித் ரசிகர்கள் கலைத்துக்கொள்ளாத ரசிகர் மன்றங்கள் சார்பாக பிரம்மாண்ட கட்-அவுட்கள், செங்கோட்டை வடிவிலான அலங்காரம், போஸ்டர்கள், வாழை மர அலங்காரம், பாலபிஷேகம் என அமர்க்களப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். காவல் துறை அனுமதியளிக்காததால் காசி தியேட்டரில் விவேகம் படத்திற்கான அதிகாலை சிறப்பு காட்சி ரத்து. கட்சி ரத்து செய்தாலும் காசி திரையரங்கம் முன்பு வைக்கப்பட்டுயிருந்த நடிகர் அஜித்தின் பேனர்களுக்கு ரசிகர்கள் பால் அபிசேகம் செய்தனர். 'அஜித் என்ட்ரி சீன்', 'அஜித் - காஜலின் எமோஷனல் காட்சிகள் ஓடிக்கொண்டிருக்கிறது' என நொடிக்கு நொடி ட்விட்டரில் அப்டேட்ஸ் தட்டிக்கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள். சக சினிமா பிரபலங்கள் ஒருபக்கம் அஜித்தின் 'விவேகம்' வெற்றிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டிருக்க, கிரிக்கெட் வீரர் அஸ்வின் 'சென்னையில் பெரும் ரசிகர்கள் கூட்டத்திற்கு இடையே 'விவேகம்' படத்தைப் பார்க்கப்போகிறேன்' என ட்வீட் தட்டியிருக்கிறார். 'விவேகம்' என்ற ஹாஷ்டேக் சென்னை டிரெண்டிங்கில் டாப்பில் இருக்கிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.