ராய்லட்சுமி படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடும் பூர்ணா..!

மலையாளத்தில் மம்முட்டி-லட்சுமிராய் காம்பினேஷன் ரொம்பவே ஸ்பெஷலானது. ‘அண்ணன் தம்பி’, ‘பருந்து’, ‘சட்டம்பி நாடு’ என இதற்குமுன் இந்த ஜோடி நடித்த மூன்று படமும் சூப்பர்ஹிட். இதில் ‘அண்ணன் தம்பி’ படத்தில் லட்சுமிராயின் அழகு வேறோரு பரிமாணத்தில் வெளிப்பட்டிருக்கும். அவ்வளவு ஏன் லட்சுமிராய் சேலைகட்டினால் கூட அதில் ஒருவித கவர்ச்சி இருக்கும்.
இப்போது நான்காவது முறையாக ‘ராஜாதி ராஜா’ படத்திற்காக மீண்டும் இணைந்துள்ளது இந்த ஜோடி. லண்டனில் இருந்த லட்சுமிராய் நேரடியாக இந்தப்படத்தின் படப்பிடிப்புக்காக பொள்ளாச்சி வந்து இறங்கிவிட்டார். (லட்சுமிராய் இப்போது ராய் லட்சுமியாக மாறிவிட்டார்).
இதுபோதாதென்று இந்தப்படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் ஆட்டம் போடுகிறாராம் ஷாம்னா காசிம்.. ( நம்ம ‘முனியாண்டி..’ பூர்ணா தாங்க.. எதுக்குத்தான் பொழுதன்னிக்கும் பேரை மாத்துவாங்களோ.. கன்ப்யூஸ் ஆகுதுல்ல..) சரி.. கிடைக்குற வாய்ப்பை நழுவ விட வேண்டாம்னு டக்குன்னு ஓகே சொல்லிட்டாராம் பூர்ணா.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
