ராஞ்சனா இயக்குனரை சந்தோஷத்தில் ஆழ்த்திய தனுஷ்..!

சமீபத்தில் கோவா சென்றிருந்த தனுஷ், ராஞ்சனா படத்தை இயக்கிய ஆனந்த் எல்.ராயை சந்திக்க விரும்பி அவருக்கு கூட முன்கூட்டியே சொல்லாமல் சஸ்பென்சாக அவரை சந்திக்க டெல்லி சென்றிருக்கிறார். இது குறித்து ஆனந்தின் கதாசிரியரான ஹிமான்ஷு ஷர்மாவுக்கு மட்டும் தெரிவித்துவிட்டு டெல்லி சென்று இறங்கினார் தனுஷ்.
தனுஷ் வருவது தெரியாத ஆனந்த் வெளியே சென்றுவிட்டு தனது ஹோட்டல் அறைக்கு திரும்ப, அங்கே தனுஷை பார்த்து சந்தோஷத்தில் திக்குமுக்காடி போனாராம்.. தனக்கு இந்தியில் ஒரு நல்ல துவக்கத்தை ஏற்படுத்தி தந்தவர் என்கிற மரியாதை நிமித்தமாகவே தானாக தேடிச்சென்று ஆனந்த் எல்.ராயை சந்தித்திருக்கிறார் தனுஷ்.
ஆனந்த் எல்.ராய் தற்போது மாதவனை வைத்து, தான் ஏற்கனவே இயக்கிய ‘தனு வெட்ஸ் மனு’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கிவருகிறார். அதன்பின் மறுநாள் முழுவதும் ‘தனு வெட்ஸ் மனு’ படத்தின் ஷூட்டிங்ஸ்பாட்டில் தான் கழித்தாராம் தனுஷ்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
