Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ராகவா லாரன்ஸை வைத்து சரித்திர படத்தை தயாரிக்கும் "கேமியோ ஃபிலிம்ஸ்"...

•On May 25, 2017
camaeo
Share
camaeo கேமியோ ஃபிலிம்ஸ் ஒரு நல்ல தரமான தயாரிப்பு நிறுவனம் என்பது அவர்களின் தனித்துவமான கதைகளாலும், அவர்கள் எடுக்கும் புதுப்புது முயற்சிகளாலும் தான் மதிப்பிடப்படுகிறது. கேமியோ ஃபிலிம்ஸின் தயாரித்து இளைஞர்களை ஈர்த்து பாக்ஸ் ஆபீஸில் பட்டைய கிளப்பியது திரிஷா இல்லனா நயன்தாரா. தற்போது வெளியாகி இருக்கும் இமைக்கா நொடிகள் டீசர் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது. இரண்டுமே வித்தியாசமான, வேறு வேறு களங்கள். குறைந்த கால அளவிலேயே 2 மில்லியன் பார்வையாளர்களையும், யூடியூப் டிரெண்டிங்கில் முதல் இடத்தையும் பெற்று வேறு மொழி ரசிகர்களிடமும் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது இமைக்கா நொடிகள் டீசர். அடுத்த படத்தின் மூலம் கேமியோ ஃபிலிம்ஸ் நிறுவனம் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துள்ளது. பாகுபலியின் புகழ் இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலியிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மகாதேவ் இயக்கும் சரித்திர படத்தில் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கிறார். 18 மற்றும் 19ஆம் நூற்றாண்டு பிண்ணனியில் உருவாக இருக்கிறது. இது குறித்து மிகுந்த மகிழ்ச்சியோடு பேசும் தயாரிப்பாளர் சி ஜே ஜெயகுமார், "எந்த ஒரு பெரிய உயரமும், சிறு அடியில் தான் துவங்குகிறது. எங்கள் படங்களுக்கு ரசிகர்கள் தரும் ஆதரவும், வரவேற்பும், உற்சாகமும் தான் சிறப்பாக வேலையை செய்து முடிக்கும் ஆற்றலை எங்களுக்கு அளிக்கிறது. பாகுபலிக்கு திரைக்கதை அமைத்த விஜயேந்திர பிரசாத் இந்த பிரமாண்ட படத்துக்கும் திரைக்கதை எழுதுவது பெருமையான விஷயம். எங்கள் தயாரிப்பில் இந்த படம் நிச்சயம் ஒரு மைல் கல்லாக இருக்கும்" என பெருமையாக குறிப்பிட்டார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.